அன்புச் செழியன் விவகாரம் : விஜய் ஆண்டனியை கிண்டல் செய்யும் கரு பழனியப்பன்

--

சிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார்.  தனது மரணத்துக்கு ஃஃபைனான்சியர் அன்புச் செழியனின் மிரட்டலே காரணம் என அவர் தற்கொலைக் கடிதத்தில் எழுதி வைத்திருந்தார்.

திரையுலகில் பலரும் அன்புச் செழியனுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.  இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி அன்புச் செழியனுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்திருந்தார்.  அவர் அன்புச் செழியன் நல்லவர் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இயக்குனர் கரு. பழனியப்பன் விஜய் ஆண்டனியின் கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்  அவர் தனது பதிவில், “விஜய் ஆண்டனி, உங்களுக்கு இன்று நல்லவராக தெரிகிறவர் ஆறு மாதம் முன்பு வரை சசிகுமாருக்கும் நல்லவராகத்தான் தெரிந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.