IPL 2016: கருண் நாயர் அபார ஆட்டம், கடைசி பந்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றி.

ராய்ப்பூரில் நேற்று நடந்த 52–வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

டேவிட் வார்னர் ஒரு பக்கம் நின்று ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. டெல்லி பவுலர்கள் பந்து வீச்சில் கடுமையான நெருக்கடி கொடுத்ததால் ஐதராபாத் பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் அதிரடியாக ஆட முடியவில்லை. முதல் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் வார்னர் அதிகப்பட்சமாக 73 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். டெல்லி தரப்பில் பிராத்வெய்ட் 2 விக்கெட்டும் மற்றும் முக்கியம் வாய்ந்த ரன் அவுட் செய்தார்.

nair-ipl-m
159 ரன்கள் எடுத்தாம் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க ஆட்டகாரரான டி காகை சொற்ப ரன்களுக்கு இழந்தது. இந்தியா ஜூனியர் உலக கோப்பை சிறந்த வீரர் ரிஷப் பந்த் மற்றும் கருண் நாயர் இருவரும் ஜோடி அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பந்த் 32 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். கருண் நாயர், பிராத்வெய்ட் அற்றும் டும்மினி ஆகியோர் உதவியுடன் வெற்றி பதை அருகில் இட்டு சென்றார்.

டெல்லி அணிக்கு 11 ரன்கள் இறுதி ஓவரில் தேவைப்பட்ட நிலையில், கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கு கருண் நாயர் அடிக்க டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த கருண் நாயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.