ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், கருணா அம்மன்.

பின்னர் பிரபாகரனை விட்டு விலகினார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கருணா, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்று  பேசினார்.

அப்போது அவர்’’ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, யானைத்துறையில் ஒரே நாள் இரவில் 2500 முதல் 3 ஆயிரம் இலங்கை வீரர்களை கொலை செய்தேன்.கிளிநொச்சியிலும் நிறையப் பேரைக் கொன்றுள்ளேன்.’ என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.

‘’ இப்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிர் இழந்தவர்களைக் காட்டிலும், நான் அதிகமானோரைக் கொன்றுள்ளேன்’’ என்றும் கருணா தம்பட்டம் அடித்துக் கொண்டது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசுக்கு, கருணாவின் ‘வாக்குமூலம்’ அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அவர் பேசியது குறித்து , இலங்கை குற்றப்புலனாய்வு துறை விசாரணை நடத்துமாறு , இலங்கை காவல்துறைத் தலைவர் சந்தனா உத்தரவிட்டுள்ளார்.

– பா.பாரதி