பதவியேற்பு விழாவிற்கு தயாராகும் கருணா – ஜெயா?

--

download

நேற்று முக்கிய அதிகாரிகள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பொக்கே கொடுத்திருக்கிறார்கள். வேறு சில அதிகாரிகள், ஜெயலலிதாவை சந்தித்து அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்காத நிலையில் பொக்கே அனுப்பிவைத்தார்களாம்.

வேறு சில அதிகாரிகள், கருணாநிதி ஜெயலலிதா இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று கலை துவங்க இருக்கிறது.  எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அல்லது எந்த கட்சிக்குமே அறுதிப்பெரும்பான்மை கிடைக்காதா.. என்பதெல்லாம் தெரிவதற்கு முன்பே, இரு கட்சிகள் பதவி ஏற்புக்கு தயாராகி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதாவது சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பதவி ஏற்புவ விழாவை நடத்த திமுக தரப்பு தயாராகி வருகிறதாம்.

அதிமுக தரப்பினருக்கு வழக்கம் போல சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழா மண்டபமும் தயாராகி வருகிறதாம்.

அதே நேரத்தில் வேறுவிதமான தகவல்களும் வருகின்றன.

“இந்த பதவி ஏற்பு விழா ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகள் செய்யவில்லை. குறிப்பிட்ட கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று கணித்து, அதிகாரிகள் சிலர் அணிபிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது வேலைதான் இந்த விழா ஏற்பாடுகள்” என்கிறார்கள்.