அறந்தாங்கியில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை: திருநாவுக்கரசர்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு அறந்தாங்கியில் முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப் படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்து உள்ளார்.
சமீபத்தில் மரணம் அடைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, புதுச்சேரியில் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்படும் புதுச்சேரி முதல்வர் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சும் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எனது குடும்பம் மற்றும் தொகுதி மக்கள் சார்பில் விரைவில் வெண்கல சிலை நிறுவப்படும் என்றார்.
மேலும், கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.