விக்கிரவாண்டி:

ன்னிய மக்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிநீத்த இடஒதுக்கீட்டு போராளியை தியாகியாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பேசிய தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணுபிரசாத் கூறினார்.

விஷ்ணுபிரசாத்

விக்கிரவாண்டியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், திமுக தலைவர்கள் உள்பட கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணுபிரசாத் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேரிகத்தார்.  அங்க நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியவர், திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரினார்.  தொடர்ந்ந்து பேசியவர், 1989ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர்களின் இடஒதுக்கீடு குறித்து பேசினார்.

அப்போது, இடஒதுக்கீடு போராட்டத்தின்போது  ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் 23 பேர் பலியானார்கள். இதில் பலியான  8 வன்னியர்கள்  விக்கிரவாண்டியை சேர்ந்த வன்னியர்கள் என்பதை சுட்டிக்காட்டியவர்,  அவர்களை இடஒதுக்கீடு போராளிகள் என்று கூறினார்கள். ஆனால் திமுக தலைவர் கருணாநிதிதான், அவர்கள் போராளிகள் அல்ல தியாகிகள் என கூறி  தியாகிகளாக அறிவித்து ரூ.2 லட்சம் வழங்கி  அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார் என்றார்.

வன்னியர்களின் இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, இறந்த 23 வன்னியர்களில், முதலாவதாக தனது உயிரை இழந்த ரங்கநாதன் படையாச்சி என்பவரும்  இந்த விக்கிவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர் என்பதை நினைவுகூர்ந்தவர், அவரது வாரிசு இன்று  ஒரு தனியார் ஒட்டலில் வேலை செய்து வருகிறார்…  ஆனால் உங்கள் வாரிசு எங்கே….. என்று பாமக தலைவர் ராமதாசையும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசியவர், திமுக வேட்பாளர் புகழேந்தியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.