கருணாநிதி நலம் பெற டி.கே.ரங்கராஜன் எம்.பி. நேரில் வாழ்த்து!

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மருத்துவமனைக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார்.

காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களது உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்கள் நலம் விசாரித்தார்.

அப்போது,  கலைஞர் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி