ழாவது நாளாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் இரு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சளித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், நுரையீரல் மற்றும் தொண்டை பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இன்று ஏழாவது நாளாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்களான மோகன், காமேஸ்வரன் தேவராஜன், கருணாநிதியின் தனிப்பட்ட மருத்துவரான கோபால் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கருணாநிதியின் மகள் கனிமொழி மருத்துவமனையிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறார். மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் ஆகியோரும் அவ்வப்போது மருத்துவனை வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த வியாழன் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டாவது நாளே, சளித்தொல்லையில் இருந்து கருணாநிதி விடுபட்டார். அவரது தொண்டை மற்றும் நுரையீரல் பகுதியில் இருந்த நோய்த்தொற்றை போக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொல்லைகளில் இருந்து விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.
நாளை அல்லது நாளை மறுநாள் அவர் வீடுதிரும்புவார்” என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இதையே தி.மு.க.வின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உறுதி செய்துள்ளார்.