டிவிட்டரில் ட்ரெண்டாகும் கருணாநிதி

 

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-ஆவது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டமன்ற வைர விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி திமுக தலைவர் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் கலைஞருக்கு வாழ்த்து குறித்து ஹேஷ்டேக் பரபரப்பாகி வருகிறது.

டிவிட்டரில் #HBDKalaignar94 என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும், சட்டசபையில் காலடியெடுத்து வைத்து, 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவும் திமுக சார்பில் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஏராளமானோர் அவருக்கு தங்களது சமூக வலைத்தள பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டரில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதால்,  #HBDKalaignar94 #Karunanidhi ஆகிய ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே, திமுக தொண்டர்கள் யாரும் தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வரவேண்டாம் என்று  ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கருணாநிதிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இருந்தாலும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது வீடு அமைந்துள்ள கோபாலபுரம் நோக்கி தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கோபாலபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதுதவிர கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க http://wishthalaivar.com/ என்கிற இணையதளமும் திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சென்றும் ஏராளமானோர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karunanidhi is Birthday Trend in Twitter, டிவிட்டரில் ட்ரெண்டாகும் கருணாநிதி
-=-