வரலாறு முக்கியம் அமைச்சரே..
டிசம்பர் 5 1996 தேதியிட்ட ஏவுகனை வார இதழில், “எதிர் காலம் எங்கள் கையில்” என்ற தலைப்பில்“ வெளியான வைகோவின் பேட்டி தொடர்ச்சி..
3
 
தியாகராயநகர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நீங்கள் உங்களது சொத்துகணக்கை காட்டினீர்கள். இவர் என்ன யோக்கியரா என்று கருணாநிதியின் முரசொலி’ உங்களைப் பற்றி எழுதியது- உங்கள் வீட்டைப் படம்போட்டு காட்டியது. இதற்கு உங்களின் பதில் என்ன?
இதற்கு நான் விரிவான பதிலை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இருந்தாலும் உங்களது கேள்விக்கு பதிலிளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
காமராஜர் வீட்டைப் படம் எடுத்துப் போட்டு, “ஏழைப்பங்காளரின் வீட்டைப் பாரீர்’ என்று முரசொலியில் எழுதியவர் தான், கலைஞர். நான் ஒன்றும் வசதியில்லாத குடும்பத்திலிருந்து வந்தவனல்ல.
நீங்கள் கேட்டதற்காக, இதைச் சொல்கிறேன். நான் அரசியலில் ஈடுபட்ட காலத்திலேயே… என்னுடைய தந்தை, இந்தியன் வங்கியிலும், ராஜகோபால் வங்கியிலும் [பின்நாளில் இது பெனிபிட் பண்டாக மாறியது] 11லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டிருந்தார். 1962-64 –ல் பிக்ச்ட் டெபாசிட்டில் 11 லட்சம் பணம் போட்டிருந்தால், இன்றைக்கு எவ்வளவு கோடி மதிப்பு, என்று, நீங்களே கணக்குப் போட்டு, ’முரசொலி’க்குச் சொல்லுங்கள் [நாமும் கணக்கு போட்டோம்.அந்த விவரம் தனியே பெடி செய்தியாக தரப்பட்டுள்ளது.]
1991-ல் அண்ணா நகரிலுள்ள இந்த வீட்டை வாங்கினேன். அன்றைக்கு இதன் மதிப்பு வேறு, இன்றைக்கு,10-15 மடங்கு உயந்துவிட்டது. 92-ல் இந்த வீட்டைக் கட்டினேன். இன்றைக்கிருக்கும் வீட்டு மதிப்பை வைத்துப் பேசக்கூட்டாது; எழுதக்கூடாது.; நான் கட்சியைவிட்டு வெளியேற்றப்படுவதற்கு முன்பே, இந்த இடத்தை வாங்கி, வீட்டைக்கட்டினேன். கட்சியை விட்டு என்னை வெளியேற்றியபிறகு நான் குடிவந்தேன். ஆனால் நான் கட்சியை  விட்டு வெளியேற்றப்பட்டப் பிறகுதான், இந்த மனையை வாங்கியது போலவும், பொய் பிரச்சாரம்  செய்கிறது, முரசொலி. என்னுடையவீட்டுடன் பக்கத்து வீட்டையும் படம் எடுத்துப் போட்டிருக்கிறார்கள், அந்த மேதாவிகள். என் வீட்டின் முன் முகப்பைப் பார்த்தால்,3 மாடி போன்ற தோற்றம் இருக்கும். பின் பக்கம் மொட்டமாடிதான் இருக்கிறது.  பார்பவர்களுக்கு  பல மாடிகள் உள்ளது போல தோற்றத்தைத் தரும் இந்த வீட்டை,அவர்கள் வசந்த மாளிகை என்கிறார்கள்.
என் பாட்டனார், 1923ல் அரண்மனை போன்ற ஒரு வீட்டை, எங்களது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில், கட்டினார்.  அந்தப் படம்கூட,இதோ இருக்கிறது.அவர்கள் சொல்வது போல, தாத்தா வீடு, எங்களுக்கு  வசந்த மாளிகையைப் போலத்தான். நான் பொருளாதார வசதியுள்ளவன். வலுவான நிலபுலன்களுடன், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் .அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்,என்க்கோ, என் குடும்பத்துக்கோ இல்லை.
இன்னும் சொல்லப்போனால், அரசியலுக்கு வந்து 26 ஏக்கர் நஞ்சை நிலத்தையும், 25 ஏக்கர் புஞ்சை நிலத்தையும் விற்றிருக்கிறேன். என் தாயார் பெயரிலிருந்த 30  லட்சம் ரூபாய்  சொத்துகளை, சங்கரன்கோவிலில் விற்றிருக்கிறேன். இப்படி, என் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்றதெல்லாம், இப்போதுதான். அதாவது, இந்த ஐந்து ஆறு வருடங்களுக்குள்தான். அரசியலுக்கு வந்து, எந்த சொத்துகளையும் நான் வாங்கவில்லை.; விற்றிருக்கிறேன். என்னுடைய சொத்துகணக்கை, நான் பகிரங்கமாகப் பட்டியலிட்டுகாட்டிருக்கிறேன். இதற்குப் பிறகும் என் மீது பழி சுமத்திப் பேசினால், பேசும்நபருக்கு ஏதோ கோளாறு என்று தான் மக்கள் நினைபார்கள்.
இவர் என்ன யோக்கியரா’ என்று கேட்கும் போதே, இவர்கள் அந்த யோக்கியத்தை இழந்துவிட்டார்கள் என்று தெளிவாக அர்த்தப்படுகிறதே.. இதை அவர்கள் உணர வேண்டும்.
 கருணாநிதி ,ஸ்டாலினுக்கு முடிசுட்டு விழா நடத்துகிறார்.; தகுதிக்கு மீறி,கட்சிக்குள் அவரைத் தலைவராக்க முயற்சிக்கிறார். என்றெல்லாம் குற்றசாட்டு வைக்கிறீர்கள். நீங்கள் உங்கள் தம்பியை , பஞ்சாய்த்துத் தலைவராக்கி இருக்கிறீர்களே, இது நியாயமா?
 
4
 
[பலமாக சிரிக்கிறார். ‘இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் ரொம்ப மகிழ்ச்சி’ என்று சொல்லிவிட்டு தொடர்கிறார்.]
என்னுடைய தம்பி ரவி என்கிற ரவிசந்திரன், மறு மலர்ச்சி திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஒரு கிளைச் செயலாளராகக்கூட இல்லை. குற்றம் சுமத்துபவர்களும் மற்றவர்களும் முதலில் இதைப் புரிந்துக் கொள்ள  வேண்டும். முதலில் இதை நீஙகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கலிங்கம்பட்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக, கிராம மக்களே விரும்பி,போட்டியின்றி என் தம்பியை தேர்ந்தெடித்திருக்கிறார்கள்.
கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் கலைஞரால் திட்டமிட்டு திணிக்கப்படும் ஸ்டாலினுடன் இதை எப்படி ஒப்பிட முடியும்?  என் தம்பி பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கு போட்டியிட்டிருந்தால், பல்லாயிரக் கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருக்க முடியும். நான் அதை விரும்பவில்லை. கடந்த முறை, சேர்மனாக இருந்தார், இப்போதுகூட ,ஜில்லா போர்டு உறுப்பினராக நின்றிருந்தால், வென்றிருக்க முடியும். வெற்றி வாய்ப்புகள் இருந்தும், என் தம்பி எந்த பொறுப்புக்கும் நிற்க விரும்பவில்லை.
ஆகையால், என்னுடைய தம்பியை கட்சிக்குள் கொண்டு வருகிறேன் என்பது கேலிகூத்தான  பேச்சு. விஷமத்தனமான செயல். நான் எந்தக் காலத்திலும் என்னுடைய  குடும்பத்தைச் சேர்ந்த எவரையும், கட்சிக்குள் கொண்டு வர்மாட்டேன். நான் எப்போதும் வெளிப்படையானவன்.
கலைஞர், கட்சியில் இருக்கும் எல்லோரையும் நசுக்கிவிட்டு, தன்னுடைய மகன்  ஸ்டாலினை மேயராகக் கொண்டு வந்து உட்காரவைத்துள்ளார். அது மட்டுமல்ல, முதல்வருக்கு சமமான அந்தஸ்தில், தன் மகன் ஸ்டாலினை காட்டி- கட்சி ஆட்சி எல்லாவற்றிலும் தலையிடும் அளவுக்கு, ஒரு நிலமையை உருவாக்கியிருக்கிறார். பத்திரிகைகளில்.. மீடியாக்களில்,தன்னுடைய படம் வராவிட்டால்கூட பரவாயில்லை; தன் மகன்  ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை, கட்சியில் செய்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான், கலைஞர் மிகவும் சிறமப்பட்டு, என் தம்பியை மையப்படுத்தி, என் மீது வீண் பழி சுமத்துகிறார். லாவணி பாடுகிறார். கலைஞரின் பழைய வரலாறு புரிந்து எவரும் இதை பெரிதாக  எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெயலலிதா –கருணாநிதி இருவர் பற்றிய உஙகளது மதிப்பீடு என்ன?
1]
 
மன்னிக்கவும். நான் ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒப்பிடவிரும்பவில்லை. காராணம் கலைஞர் ஒரு அரசியல்வாதி. ஜெயலலிதா அப்படி அல்ல. கலைஞர் ஒரு இயக்கத்தில் சிறு வயது முதலே ஈடுபட்டு, கடுமையாக உழைத்து,அரசியல் பின்னணியுடன் பொதுவாழ்வுக்கு வந்தவர். கலைஞர் ,சுயநலத்தின் காரணமாக,  தன்னுடைய  குடும்ப ஆதிக்கத்தை, கட்சியிலும்,ஆட்சியிலும் நிலை நிறுத்தியிருப்பவர். கலைஞருடன், எம்.ஜி.ஆர்.ஆரை ஒப்பிடலாமே தவிர ஜெயலலிதாவை சரிசமமாக அவருடன் வைத்து ஒப்பிட முடியாது; கூடாது. ஜெயலலிதா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத்தான் , கட்சியில் இணைந்து , ஆட்சிக்கு வரமுடிந்தது. ஜெயலலிதாவுக்கு அரசியல் பின்னணியோ, பொது வாழ்வு ஈடுபாடோ இருந்ததில்லை. எனவே, ஜெயலலிதாவை தயவு செய்து கலைஞருடன் ஒப்பிடாதீர்கள்.
 
0-5

சந்திப்பு: எம்.பி. திருஞானம்,  பூம்புகார் ராஜேந்திரன்

(தொடரும்)