ஓராண்டுக்கு பிறகு தொண்டர்களுடன் கருணாநிதி சந்திப்பு! (வீடியோ)

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வு எடுத்து வந்த நிலையில், இன்று தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி சந்தித்ததால், திமுகவினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம்   உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணா நிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை முடிந்து, கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பிய பின்னரும், அவருக்கு டாக்டர் கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டார். இது திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, தனது கொள்ளுப்பேரன் திருமணத்தை கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி சென்று கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வந்து சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இன்று கோபாலபுரத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையைசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

கருணாநிதியின் இந்தி சந்திப்பு அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://www.youtube.com/watch?v=sQ5F_RguJJA&feature=youtu.be