கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுகிறது!: “செயல் தலைவர்” ஸ்டாலின்

ன்று காலை கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொறுப்பேற்றுக்கொண்டவுடன் அவர் பேசியதாவது:

“தலைவர் கருணாநிதி இல்லாத பொதுக்குழுவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி அடையமுடியவில்லை .   அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

செயல் தலைவர் என்பதை பதவியாக கருதவில்லை, எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகவே கருதுகிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே திமுகவில் எனக்கு ஈடுபாடு இருந்தது. இன்று, சூழல் என்னை செயல்தலைவராகி உள்ளது. பொறுப்புடன் செயல்தலைவராக பணியாற்றுவேன்”  என  ஸ்டாலின் பேசினார். .