சென்னை:

டல்நிலை காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரக்குழந்தைக்கு  கிரிக்கெட் விளையாட பந்து போடும் காட்சி பற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீப காலமாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக தொண்டர்களை சந்தித்து வரும் கருணாநிதி, தற்போது பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியும் வகையில், தனது  பேரன் அருள்நிதியின் மகன் மகிழனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் பெவளியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பேரன் மகிழன் கிரிக்கெட் பேட்டுடன் தயாராக இருப்பது போலவும், அவனுக்கு கருணாநிதி பந்தை போடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் கருணாநிதியின்  மகன் மு.க.தமிழரசு, மகள் செல்வி ஆகியோர் அருகில் நிற்க, கொள்ளுப் பேரனுக்கு பந்து போடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

வைரலாகி வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுத்து வரும் கருணாநிதி, கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி பந்து போடும் வீடியோ….