கருணாநிதி விரைவில் குணமடைய பொன்னார், முத்தரசன் வாழ்த்து

--

சென்னை,

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி குணமடைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

அதுபோல் கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசனும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் விரைவில் நலம் பெற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்னை சக்தியின் அருளால் கருணாநிதி விரைவில் குணமடைந்து அரசியல் பணியை தொடர்ந்திட பிரார்த்திப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற முத்தரசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.