சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி!
சென்னை:
சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டி ருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவடைந்ததை தொடர்ந்து, அவர உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம்தி .மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து, அவரது கழுத்தில் செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக ஓய்வு பெற்று வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நலமுடன் இருப்ப தாக மருத்துவமனை வட்டாரம் கூறியது. அதையடுத்து, சுமார் 11 மணி அளவில் அவர் வீடு திரும்பினார்.
அவருடன் அவரது துணைவியார் ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனையில் இருந்தனர்.