கருணாநிதி நன்றாக பேசுகிறார்: மு.க. அழகிரி தகவல்

கருணாநிதி – அழகிரி

 

சென்னை:

ருணாநிதி நன்றாக பேசுவதாக, மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக பேச முடியாத நிலையில் இருந்து வருகிறார். அவர் தனது கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

அவருக்கு மருத்துவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கருணாநிதியின் மகனும், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரி இன்று கருணாநிதியை சந்தித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க. அழகிரி, தற்போது கருணாநிதி நன்றாக பேசுவதாக தெரிவித்தார்.

பேச்சாற்றல் மிக்க கருணாநிதி, பேச முடியாமல் முடங்கியது கட்சி எல்லைகளைக் கடந்து பல தரப்பினரையும் கவலை கொள்ள வைத்தது. இந்த நிலையில் கருணாநிதிக்கு மீண்டும் பேச்சு திரும்பியிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.