முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மம்தா!

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வளாகத்தில் கருணாநிதி திருவுருவச் சிலை திறக்கப்பட்டது.

முரசொலி வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி   திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிப்பேரரசு வைரமுத்து  உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.