தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி!: ராகுல் புகழாரம்

மிழகத்தின் குரலாக ஒலித்தவர்  கருணாநிதி என்று ராகுல் புகழாரம் சூட்டினார்.

இன்று மாலை நடந்த கருணாநிதி சிலை திறப்பையடுத்து சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில்  பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

“கருணாநிதி சாதாரண அரசியல் லைவர் அல்ல. அவர் தமிழ் மக்கள் குரலாக இருந்தார். தமிழக மக்களின் துயரை தனது  துயராக நினைத்தவர்… தமிழக மக்கள் மகிழ்ச்சியை தனது மகிழ்ச்சியாக நினைத்தவர்.

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தவர் கருணாநிதி.

முதன் முறையாக அவரது வீட்டுக்குச் சென்றபோது ஆச்சரியப்பட்டேன்.. அவரது வீடு பெரிதாக இருக்கும், ஏராளமான பொருட்கள் இருக்கும் என நினைத்து சென்றேன். நான் வீட்டுக்குள்ளே போனபோது, அவரது எளிமையை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். பல ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருந்தபோதும், தமிழகத்தின் முதல்வராக மீண்டும், மீண்டும் பதவிக்கு வந்தபிறகும் கருணாநிதியிடம் ஆணவம் இருந்ததில்லை. இது இளம் அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடம். எனக்கு அது உந்துதலாக இருந்தது. ஆகவே எனக்கு வழி காட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசய ராகுல் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்:

“இப்போதுள்ள மத்திய அரசாங்கம் ஒரு கொள்கைதான், நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. கோடானகோடி மக்கள் கருத்தை மதிக்க வேண்டியதில்லை என்று இந்த அரசு நினைக்கிறது. பல மொழிகள், கலாச்சாரத்தை மதிக்க கூடாது என்று இப்போதுள்ள  அவர்கள் நினைக்கிறார்கள்.  நாடு முழுக்க உள்ள மக்களின் ஒற்றுமையை உறுதி செய்து பாஜக அரசை அகற்ற வேண்டும். இந்தியா என்ற கொள்கையை அழிக்கும் முயற்சியை நாம் ஏற்கப்போவதில்லை.

நமது உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையம் போன்ற உச்சபட்ச நிறுவனங்களை மத்திய பாஜக அரசு அழித்து ஒழிப்பதை நாம் அனுமதிக்க கூடாது. நான் இணைந்து நின்று இதை சாதிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி பேசினார்.