விக்ரம் மகள் திருமணத்தில் கலந்துகொள்கிறார் கருணாநிதி

கடந்த ஆண்டு நடைபெற்ற தனது கொள்ளுப்பேரன் திருமண நிச்சயதார்த்த விழாவில் கருணாநிதி

சென்னை,

டிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா – கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் ஆகிய இருவரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் 10ந்தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிலையில் நவம்பர் 1ந்தேதி நடைபெற இருக்கும் அவர்களது திருமணத்திலும் கருணாநிதி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

உடல்நலமின்மையால் கட்சி பணி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டிற்கு பின்னர் தற்போது  குடும்ப திருமணத்தை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

உடல்நலமின்மையாலும், வயது முதிர்வு காரணமாக ஓராண்டு காலமாக எந்தவித பொது நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த  திமுக தலைவர் கருணாநிதி, தற்போது உடல்நிலையில் நல்வ  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த   19-ம் தேதி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் சென்று, அங்கு முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்த தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் காட்சிகள் வீடியோ பதிவு திமுக சார்பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுப் பேரன் மனோரஞ்சித்தின் திருமண விழா நடக்க உள்ளது.

இவர்களின் திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை கருணாநிதி நடத்தி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமின்றி திமுக தொண்டர்களும்  மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மணமகன் மனுரஞ்சித்  கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன். இவரது தாயார் தேன்மொழி, திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.