வதந்தியால் கருணாநிதி ஆயுள் கூடும்!: இல.கணேசன்

--

மூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் கருணாநிதி ஆயுள் அதிகரிக்கும் என்று  இல கணேசன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்றிருக்கிறார். அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அங்கு சிறப்பு மருத்துவக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே அவரது உடல் நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரவிவருகிறது.

 

 

இந்நிலையில் ஈரோட்டில் பாஜக எம்பி இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் கருணாநிதியின் ஆயுள் அதிகரிக்கும்.  குழந்தைகள் கடத்தல், தலைவர்கள் உடல் நிலை குறித்தெல்லாம் சமூகவலைதளங்களில் தவறான கருத்துகளை பகிர சில கூட்டமே செயல்பட்டு வருகிறது.   திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதி முழுமையாக குணமடைந்து மீண்டும் மக்களை சந்திக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றார்.

மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருக்காக ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, “அதில் எந்தவித தவறும் இல்லை. ஒருவர் உயிருக்கு போராடும் போது அவரை ராணுவ விமானத்தில் அழைத்து செல்வதில் எந்தவித தவறும் இல்லை.  மனிதாபிமான அடிப்படையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துணை முதல்வரின் சகோதரருக்கு விமானம் வழங்கியுள்ளார்” என்றார். மேலும், “தனக்கு நன்றி சொல்ல வந்த சென்ற ஓ.பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் நோக்கம் நிர்மலா  சீதாராமனுக்கு இல்லை. ஒரு துணை முதல்வரை அவமானப்படுத்தும் நோக்கம் பாஜகவுக்கு கிடையாது” என்றார்.