கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது….மருத்துவமனை அறிக்கை

சென்னை:

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.