கருணாநிதி உடல்நிலை: தொலைபேசி மூலம் நலம் விசாரிக்கும் ரஜினி….

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றதை தொடர்ந்து சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியின் மூலம், திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டடாலினிடம் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

கருணாநிதியிடம் ஆசி பெறும் ரஜினி (பைல் படம்)

கடந்த சில  நாட்களாக காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக வீட்டில் சிகிச்சை  பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று நள்ளிரவு ரத்த அழுத்தம் குறைவானதை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து, குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பலர் நலம் விசாரிது உள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனை வந்து நேரில் நலம் விசாரித்து செல்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் டில்லியில் இருந்து வந்து கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதி குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ரசிகர்களை பல ஆண்டுகளாக சொல்லி ஏமாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் போன் மூலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது திமுகவினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெறும் ரஜினி, கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறி உள்ளார். ஆனால், தற்போது கருணாநிதி அவசர சிகிச்சை மேற்கொண்டு வரும், கடந்த 2 நாட்களாக ரஜினி, தொலைபேசி மூலமே நலம் விசாரித்து வருகிறார்.

வட மாநில தலைவர்களே விமானம் மூலம் ஓடோடி வந்து, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்லும் நிலையில், ரஜினி நேரில் வந்து நலம் விசாரிக்க முடியாதா?  என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுதான் ரஜினி  கருணாநிதி மீது வைத்துள்ள மரியாதையா? ரஜினிக்கு  பணம் சம்பாதிப்பது மட்டுமே குறி மற்றதெல்லாம் வேஷம் என்று திமுக தொண்டர்கள் குறை கூறி வருகிறார்கள்.