கருணாநிதி சிலை திறப்பு விழா: கெஜ்ரிவால், சரத்பவாருக்கு ஸ்டாலின் அழைப்பு..

டில்லி:

பாஜகவுக்கு எதிராக அணி திரளும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத் பவாரை சந்தித்து அழைப்பு வழங்கினார்.

சரத்பவாருடன் ஸ்டாலின் சந்திப்பு உடன் கனிமொழி

நேற்று காலை டில்லி சென்ற ஸ்டாலின், அங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ராகுலையும் சந்தித்துபேசிய ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு, சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், முன்னதாக தேசிய வாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து, அழைப்பிதழ்கொடுத்து கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அப்போது ஸ்டாலினடன் கனிமொழிஎம்.பி.யும் உடன் இருந்தார்.  அப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக சரத்பவார் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்பின் அதன்பின் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவருடன் உரையாடினார். அப்போது கெஜ்ரிவால், ஸ்டாலிடம் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார். சந்திப்பின்போது,  கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஸ்டாலினுடன் கனிமொழி, ராஜா, டி.ஆர்.பாலு எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.

கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் சந்திப்பு உடன் திமுக எம்.பி.க்கள்

டில்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு  கருணாநிதி சிலை திறப்பு விழா தொடர்பாக பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின்  அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.

ரும் 16-ம் தேதி  அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணா சிலையும் மெருகூட்டப்பட்டு மீண்டும் அமைக்கப்பட உள்ளது. அத்துடன்  மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது. இதற்காகத்தான் ஸ்டாலின் பல அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார். நேற்றில் இருந்து அவர் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

இன்று அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆகிய தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க உள்ளார்.