அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள கருணாநிதியின் எழில்மிகு சிலை (படம்)

--

சென்னை:

ண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் எழில்மிகு சிலையின் படம் வெளியாகி உள்ளது.

கண்ணை கவரும் வகையில் எழிலான தோற்றத்தில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த வெண்கலச் சிலை, கருணாநிதியை நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத் தில்  டிசம்பர் 16ந் தேதி தலைவர்கள் முன்னிலையில் திறக்கப்படும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. . இந்த சிலை திறப்பு விழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதி சிலையுடன், ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் சிலையும் புணரமைக்கப்பட்டு அருகே நிறுவப்பட இருப்பதாகவும்  திமுக தெரிவித்துள்ளது.