கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை

றைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்.   இவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார்.    இவரது இரண்டாவது மகன் மு க ஸ்டாலின் நேற்று திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை தயாளு அம்மாளுக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.   அவரை உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர் குடும்பத்தினர் அங்கு அவரை அனுமதி செய்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் தொடர்ந்து செய்யப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   அவர் உடல்நிலை தேறி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.