‘கலைஞர் ராஜதந்திரி’: வைகோ புகழாரம்!

சென்னை,

ன்று 94வது பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதி ஒரு ராஜதந்திரி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழாவும், சட்டமன்ற வைர விழாவும் ஒரு நேர இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அவருக்கு ஜனாதிபதி முதல் அடிமண்ட தொண்டர்கள் வரை வாழ்த்து கூறி வருகின்றனர்.

கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா இன்று மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

 

விழாவில், காங். துணைத் தலைவர் ராகுல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்.,தலைவர் சரத்பவார், ஜம்மு- – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்.கம்யூ. பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இ.கம்யூ. தேசிய செயலர், டி.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

மேலும் பல  அரசியல் கட்சி தலைவர்கள்  கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

திமுக தலைவர் கருணாநிதி ஒரு இலக்கியவாதி எனவும், அவர் ஒரு ராஜதந்திரி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கருணாநிதியின் எழுத்துக்கள் காலத்தால் அழிக்க முடியாதவை எனவும், அவரின் வைரவிழா நிகழ்ச்சி மிக சிறப்பாக நடக்கட்டும், வாழ்த்துக்கள் எனவும் குறிபிட்டுள்ளார்.

You may have missed