சென்னை:

ல்வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கருணாநிதி பிறகு வீடு திரும்பினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று மாலை திடீரென பல் வலி ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு சற்று முன் வீடு திரும்பினார்.

அவர் நலமுடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்