மீண்டும் சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி சிலை : கி வீரமணி

சென்னை

ண்ணாசாலையில் கருணாநிதி சிலையை மீண்டும் அமைக்க உள்ளதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணாசாலையில் திராவிடர் கழகம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டிருந்தது.    அப்போது அவர் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழக முதல்வராக எம் ஜி ராமச்சந்திரனும்  இருந்தனர்.

எம்ஜிஆர் மரணம் அடைந்த போது சென்னையில் கடும் கலவரம் உண்டாகியது.   பல கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டன.   அத்துடன் அண்ணாசாலையில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலை விஷமிகளால் உடைத்து நொறுக்கப்படது.

அதன் பிறகு அந்த சிலையை மீண்டும் நிறுவ திராவிடர் கழக தலைவர் கி வீரமணி முயன்றார்.   ஆனால் கருணாநிதி அதற்கு ஒப்புக் கொள்ளவிலை.   இந்நிலையில் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி மறைந்தார்.   அதை ஒட்டி முன்பு கருணாநிதியின் சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் சிலையை வைக்க உள்ளதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

You may have missed