நடிகர் கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

ர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை நேற்று இரவே ஆரம்பித்துவிட்டது. அது குறித்து பார்ப்போம்.

நேற்று இரவு 10.30 மணி: ரகசிய உத்தரவின்பேரில் வடபழனி காவல்நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். (வடபழனி காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட சாலிகிராமத்தில்தான் கருணாஸ் வீடு இருக்கிறது.)

இரவு 12.00 மணி:   கருணாஸ் கைது செய்யப்பட உள்ளதாக செய்திகள் பரவியது.

இரவு 12.30 மணி: சென்னை சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருணாஸின் இல்லத்திற்கு அருகில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

காலை 5.15 மணி: சாலிகிராமம் சத்தியமூர்த்தி சாலை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காலை 5.20 மணி: நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் கருணாஸின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

காலை 5.30 மணி: சர்ச்சைக்குரிய விதமாக பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்ய இருப்பதாக   கருணாஸிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 6.27 மணி: கருணாஸ் கைது செய்யப்பட்டு கீழே அழைத்துவரப்பட்டார்.

காலை 6.32 மணி: கருணாஸ்  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

காலை 6.45 மணி: நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு கருணாஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.