‘நெஞ்சுவலி போயிந்தே..’ கருணாஸ் டிஸ்சார்ஜ்

சென்னை:

நெஞ்சுவலி காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி குணமாகிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

சமீப காலமாக டிடிவிக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்த கருணாஸ், இடையில் ஜாதி குறித்து பேசியதால், கைது செய்யப்பட்டார். 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில்  நடைபெற்றபோது,  கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

இந்த வழக்கில் கருணாசை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்து சென்னை வந்திருந்தனர். அதிகாலை முதலே   கருணாஸின் வீட்டைச் சுற்றி கண்காணித்தனர்.

இதையறிந்த கருணாஸ்,  நெல்லை கார் உடைப்பு வழக்கில் கைது செய்யப்படலாம் என அஞ்சி, நெஞ்சுவலி என கூறி கடந்த 3ந்தேதி வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரமும், அவரது குடும்பத்தினரும் கூறி வந்தனர்.

இந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் கருணாசுக்கு ஜாமின் வழங்கி உள்ள நிலையில்,  கருணாஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ந்த வழக்கில் இருந்து தனன்னை விடுவிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருணாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் வாகனம் சேதப்படுத்தப்பட்ட போது, அங்கு தாம் இல்லை என்றும், வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால், , தம் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் வழங்கி இருப்பதற்காக வழக்கினை ரத்து செய்ய முடியாது என்றும் வழக்கு குறித்து புளியங்குடி காவல் ஆய்வாளர் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தர

விட்டார். மேலும் குற்றப் பத்திரிக்கையில் மனுதாரர் பெயர் இருந்தால் மீண்டும் மனுதாக்கல் செய்யலாம் எனக் கூறி வழக்கினை நீதிபதி முடித்து வைத்தார்.