சென்னை

ரவு விடுதி ஒன்றில் அடிதடியில் ஈடுபட்டதற்காக கருணாஸின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற இரவு விடுதிக்கு நடிகரும் அதிமுக ஆதரவு எம் எல் ஏவுமான கருணாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் சனிக்கிழமை இரவு வந்துள்ளனர்.   அப்போது அவருடைய நண்பர்கள் ஒருவரை அடித்து உதைக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.

அந்தக் காட்சியில் கண்டுள்ளபடி கருணாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் ஒருவருடன் வாக்குவாதம் செய்கின்றனர்.  வாக்குவாதம் செய்தவரை கருணாஸின் நண்பர் ஒருவர் அடித்து தள்ளுகிறார்.  பிறகு மற்றவர்களும் சேர்ந்துக் கொள்ள அந்த இடமே ரணகளம் ஆகிறது.  அதைத் தடுக்க வந்த கருணாஸ் அவருடைய நண்பர்களால் கீழே தள்ளப்படுகிறார்.   பிறகு அவர் சண்டையில் இருந்து வெளியேறுகிறார்.  அங்கு வந்த மற்றவர்கள் பயந்து ஓட,  பணியாளர்கள் வந்து சமாதானம் செய்விக்கின்றனர்.

இது குறித்து அடிபட்டவரான பரணீஸ்வரன் தெரிவிக்கும் போது, ”பாதுகாவலர்கள் என ஒரு குழு ஒன்று உள்ளது.  அவர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்கள்.  இந்த குழுவை நடத்துவது தாமோதரன் மற்றும் கோபாலகிருஷ்ணன் என்னும் சகோதரர்க்ள்.  இவர்கள் கருணாஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.  நான் கருணாஸை இரவு விடுதியில் சந்தித்தேன்.  அவர் என்னை அஜய் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  நான் கைகளைக் குலுக்கி விட்டு என் இருக்கைக்கு வந்தேன்.

அதன் பிறகு தாமோதரன் வந்து என்னிடம் நான் தாமோதரன் இவர் என் சகோதரன் அஜய், எங்களுக்கு எல்லாம் நீ மரியாதை தரமாட்டாயா எனக் கேட்டார்.  நான் அதற்காக உங்களை எழுந்து நின்று வணங்க வேண்டுமா? எனக் கேடதும் என்னை கண்டபடி திட்டியவாற் அடிக்க அரம்பித்தார்.   அஜய் என் மீது தாவிக் குதித்து ஒரு பாட்டிலை என் மீது வீசினார்.  நான் கீழே விழுந்ததும் ஒரு ஆறு ஏழு பேர் என்னை தாக்க ஆரம்பித்தனர்.  எனக்கு முகமெங்கும் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.  விடுதி பணியாளர்கள் வந்து என்னை மீட்டனர்.

அதன் பிறகு போலீசார் வந்து அவர்களை விரட்டி அடித்தனர்.  என்னை வெளியில் வந்ததும் தாக்க வாசலிலேயே காத்திருந்தனர்.  நான் பின்புற வழியாக வெளியே வந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றேன்.  ஞாயிறு காலை போலீசில் புகார் செய்தேன்.  கருணாஸ் சண்டையை நிறுத்த முயன்றும் அவர் நண்பர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை” என தெரிவித்தார்.

போலீசார் அஜய், தாமோதரன் மற்றும் அவர் நண்பர்கள் மீது தவறான செய்கை,  தப்பான வரிகளை உபயோகித்து பொது இடத்தில் பாடுவது,  அபாயகரமான ஆயுதங்களுடன் மற்றவரை தாக்குவது, கொலை முயற்சி, பொது இடத்தில் தவறாக நடந்துக் கொள்வது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  ஆனால் இந்த வழக்கில் கருணாஸின் பெயர் இடம் பெறவில்லை.  இது பற்றி கேட்டபோது அவர் எந்த சண்டையிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=2aePdqbLxw0]