Random image

கருணாஸ் சசிகலாவிடம் பணம் வாங்கியிருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

டிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலாவிடம் பணம் வாங்கியிருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறினார்.

கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த  முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதன்  தலைவரும், நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், தமிழக முதல்வரையும், காவல்துறையையும் கடுமையாக தாக்கி பேசினார்.

கூவத்தூரில் இந்த கருணாஸ் இல்லாமயா இந்த அரசாங்கம் உருவானது?  கூவத்தூர் இடத்தை காட்டினது இந்த கருணாஸ்தான். அதை மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.  மேலும் நான் அடிப்பேன் என முதல்வரே பயப்படுகிறார் என்றும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக ஒருமையில் பேசியும்  விமர்சனம் செய்தார். உன்னுடைய சட்டைய கழட்டிட்டு வா, நீயா நானானு பாத்துருவோம் என்று  கடுமையாக விமர்சனம் செய்தார். தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கூட கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று சரமாரியாக பேசினார்.

கருணாஸின் பேச்சு பெரும்   சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  நவராத்திரியை முன்னிட்டுச் சென்னை குறளகத்தில் கதர் கிராமத் தொழில்வாரியத்தின் கொலுப் பொம்மை கண்காட்சியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம்,   ஆட்சியை தக்க வைத்ததில் தனக்கும் பங்குள்ளதாக கருணாஸ் கூறியது குறித்து  கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், கருணாஸ் சசிகலா தரப்பினரிடம் பங்கு வாங்கியிருப்பார் என கூறினார்.