கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்: தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு மனு

சென்னை:

2 வழக்குகளில் ஜாமின் பெற்று நிபந்தனை ஜாமினில் இருந்து வரும் கருணாஸ் இன்று எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜரானார். அப்போது, தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்தார்.

சமீப காலமாக அதிமுக அரசுக்கு எதிராக குரல்கொடுத்த கருணாஸ்மீது அதிமுக அரசு பல்வேறு வழக்களை பாய்ச்சியது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ்,  வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமின் பெற்றோர். மேலும், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது, அதை காண வந்த  ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்டடு அதிலும் ஜாமின் பெற்றார்.

அதைத்தொடர்ந்து,  நெல்லையில் தேவர் சமுதாய அமைப்பு நிர்வாகியின்  கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன்ஜாமின் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் உள்ள எம்.எல்.ஏ. கருணாஸ் இன்று  எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து, அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் குருபூஜையில் பங்கேற்க அனுமது கோரியும், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட 3 நாட்களுக்கு விலக்கு கோரியும்  கருணாஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.