அரசுக்கு எதிராக திரையுலகம் போராட்டத்தில் குதிக்கும்! கருணாஸ் எச்சரிக்கை

சென்னை:

ர்க்கார் திரைப்படம் தமிழகத்தில்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சர்க்காருக்கு ஆதரவாக கருணாஸ் களத்தில் குதித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிராக  ஒட்டுமொத்த திரைத்துறையும் போராட்டத்தில் குதிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும்.

முறையான தணிக்கைசர்கார் திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேலையில் அத் திரைப்படத்தில் உள்ள காட்சிகளை யும், வசனங்களையும் நீக்க சொல்லி போராடுவது சட்டவிரோத செயலாகும்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பும் படி தான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதை தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு “பொண்டாட்டி காரன் பொண்டாட்டிய அடிக்க திண்ணையில் கிடக்கிறவன் தேமி..தேமி.. அழுதானாம்” அதுபோல படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும், நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் ஒரு இயக்குநர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது! அ.தி.மு.க. வினர் கொதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?

அவர்களின் அரசியல் அடாவடியெல்லாம் திரைப்படங்கள் வழி தெரிந்து விடுகிறதே என்றா? சர்கார் திரைப்படம் “ஒட்டு மொத்த இன்றைய அரசியலை” தோலுரித்து காட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழிப்புணர்வை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள் என்று அ.தி.மு.க. அராஜகம் செய்கிறதா? இவ்வாறு செய்வீர்களே யானால் இன்னும் இது போல் இன்னும் ஆயிரமாயிரம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் அதையாரும் தடுக்க முடியாது. போலி அரசியலின் முகமூடி இதுபோன்ற படங்களில் வழியாகத்தான் கிழிந்து தொங்கும். அதை மக்களும் விரும்புவார்கள்!

சட்டப்படியாக தணிக்கைபெற்ற இத்திரைப்படத்தை அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது, வசனங்கள் – காட்சிகளை நீக்கச் சொல்வது, கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும். இச்செயலை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையும் இணைந்து பெரும் போராட்டத்தை தொடங்குவோம்!

இவ்வாறு கருணாஸ் கூறி உள்ளார்.