விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் டீசர் ரிலீஸ் ஆனது…

--

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் கருப்பன் பட டீசர் வெளியாகி உள்ளது.

எம் ரத்னம் தயாரிக்கும் கருப்பன் படத்தின் கதை ஜல்லிக்கட்டை மையமாக கொண்டதாக சொல்லப்படுகிறது.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மாட்டை அடக்குவது போல் போஸ்டர் வெளியானது.  விஜய் சேதுபதிக்கு இணையாக தன்யாவும், மற்ற பாத்திரங்களில் ராஜேந்திரன், பசுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கம் செய்துள்ளார்.  இசை டி இமான்.  ஏற்கனவே கிராமத்து நாயகனாக விஜய் சேதுபதி தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களில் நடித்த போதிலும் மாடுபிடி வீரராக நடிப்பது இதுவே முதல் முறை.  இவருடைய பெரிய மீசை வைத்த கெட் அப் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் டீசர்  வெளியாகி உள்ளது.