பிக் பாஸில் தொடங்கிய முதல் நாமினேஷன்…..!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது. முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை டாஸ்கில் தேர்வு செய்யப்பட்ட 8 பேர்களில் இருந்து தான் நாமினேட் செய்ய வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதன்படி வரிசையாக ஒவ்வொரு போட்டியாளர்களாக நாமினேட் செய்கின்றனர்.இதில் அதிகமாக சனம் செட்டி, சிவானி மற்றும் ஆஜித் பெயர்கள் இடம் பிடிக்கிறது.

இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் சுரேஷிடம் யார் யாரெல்லாம் மாஸ்க் போட்டு கொண்டு இருக்கின்றார் என கேள்வி எழுப்புகின்றார். அதற்கு பதில் அளித்த சுரேஷ், ரியோவை கை காட்டி அவர் சொன்னாரு இல்லையா..எனக்குனு ஒரு முகம் இருக்கும் அதான் எனக்கு தெரியும், என்னோட இன்னோரு முகம் நான் மறைத்தேன் என ரியோ கூறியதாக அவரை கை காட்டி பேசுகின்றார்.

இதற்கு பதில் அளிக்கும் ரியோ நீங்கள் யாரை வேண்டுமானாலும் எடுத்துக்காட்டாக கூறலாம் என்னை கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னோட உண்மையான முகம் இது தான் ஓகே என கோபமாக கூறுகின்றார்.

மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர் நிஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் . அதில் நிஷாவின் குழந்தையை பார்த்து நிஷா நெகிழ்ச்சி,