ஈரோடு, நீலகிரியைத் தொடர்து கரூர் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாகிறது…

சென்னை:

மிழகத்தில், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 15 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது கரூர் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக, அதாவது பச்சை மண்டலமாக மாறி உள்ளது.

உலகநாடுகளை பந்தாடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பேயாட்டம் ஆடி வருகிறது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் சில பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது.  மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தமிழக அரசும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், முதன்முதலில் கொரோனா பாதிப்பு அதிகமான ஈரோடு மாவட்டம் தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக உருமாறி உள்ளது.

அதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டமாகி உள்ளது.  அங்கு இதுவரை 9 பேர் மட்டுமே கொரோனா வால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளதால் புதிய வரவுகள்  இன்றுவரை ஏதும் இல்லை.

இதையடுத்து, இன்று கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருமாறி உள்ளது. இங்கு ஏற்கெனவே 42 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்ததில் 41 பேர் ஏற்கனவே குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனால்கள், எஞ்சிய ஒருவரும் இன்று வீடு திரும்பியதைத் தொடர்ந்து,   கரூர் மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் இதுவரை கொரோனா பரவல் இல்லாத பச்சை மாவட்டமா இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில்,  நீலகிரி மாவட்டத்தல் மே 4ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்  முழு பாதுகாப்புடனும்,  அரசின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து திருப்பூரிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.   அங்கு 12 பேருக்கு கொரோனா உறுதியானதால், அவர்கள் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள்  முழுமையாக குணமடைந்துள்ளனர், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை  112 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 103 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர், மேலும் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் ஓரிருநாளில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி