வெங்கட்பிரபுவின் ‘கசடதபற’ டைட்டில் லுக் வெளியீடு…!

இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சிம்புதேவன். இயக்கக்த்தில் உருவாகி இருக்கும் படம் ‘கசடதபற’. சிவா, ஜெய், வைபவ், பிரேம்ஜி என வெங்கட்பிரபு டீம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இதன் டைட்டில் லுக்கை இன்று (மே 20) ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் சூர்யா.

‘பிக் பாஸ் 2’ விஜயலட்சுமியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதை அவர் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.