லப்புரம்

காசர்கோட் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி ஒரு ரன் கூட எடுக்காமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தி உள்ள பெரிந்தல்மன்னா கிரிக்கெட் மைதானத்தில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன    இதில் காசர்கோட் அணியும் வயநாடு அணியும் மோதின.   முதலில் பேட்டிங்கில் காசர்கோட் அணியினர் களம் இறங்கினர்.   அவ்வணியின் அக்‌ஷதா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே வயநாடு அணித் தலைவர் நித்யா லூர்துவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். இந்த போட்டியில் நித்யா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்  அடுத்து வந்த ஜோஷிதா ஐந்து பந்துகளில் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.   இதில் தொடர்ந்து அவர் மூன்று விக்கட்டுகளை அடுத்தடுத்து சாய்த்து ஹாட்ரிக் அடித்தார்.   அடுத்து ஆர்த்தி ரவி மற்றும் ஸ்ரயா ராய் ஆகியோர் தலா 2 மற்றும் 1 என விக்கட்டுகளை வீழ்த்தினர்.

காசரகோட் அணியினர் ரன் ஏதும் ஓடாமலே அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர்.    ஆனால் வயநாடு அணியின் பந்து வீச்சாளர்கள் மூலம் நான்கு எக்ஸ்டிராக்கள் கிடைத்ததால் காசர்கோட் அணியினருக்கு நான்கு  ரன்கள் கிடைத்தன.   அடுத்து களம் இறங்கிய வயநாடு அணிக்கு 5 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வயநாடு அணி களம் இறங்கிய முதல் ஓவரிலேயே ஐந்து ரன்கள் எடுத்து 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.    இது குறித்து காசர்கோட் மாநில கிரிக்கெட் சங்க செயலர் நவுஃபால், “இந்த தோல்வி மிகவும் அதிர்ச்சிகரமானதாகும்.   எங்கள் அணி நன்கு விளையாடக்கூடிய அணி.    ஆனால் எங்கள் அணியில் பெண் பயிற்சியாளர் இல்லை.

நாங்கள் எங்களுடைய மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரைக் கொண்டு பயிற்சி எடுத்தோம்.   கடந்த முறை இந்த அணியின் வீராங்கனைகள் நன்கு விளையாடினார்கள்.   வயநாடு அணி மிகவும் திறமை வாய்ந்த அணியாகும்.  ஆயினும் எங்களுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைக்கும் என எண்ணவில்லை” என தெரிவித்துள்ளார்.