காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கத் திட்டத்தால் பழமையான மசூதிக்கு பாதிப்பு வருமா?: வாரணாசி முஸ்லிம்கள் கவலை

வாரணாசி:

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கத் திட்டத்துக்காக அருகிலிக்கும் பழமையான மசூதிக்கு ஆபத்து வருமோத என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளது.


கடந்த 2018- ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி வாரணாசியில் உள்ள 17-ம் நூற்றாண்டு மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்படுவதாக அதன் பொறுப்பாளர் எய்சாஸ் முகமது இஸ்லாஹிக்கு செல்போனில் தகவல் வந்தது.

அங்கு விரைந்து சென்றபோது, ஏற்கெனவே நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
விசாரித்தபோது, வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கத் திட்டத்துக்காக தாழ்வாரம் அமைப்பதற்காக மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

முஸ்லிம்களின் போராட்டத்துக்குப் பின் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் பணியை மாவட்டம் நிர்வாகம் நிறுத்தியது. மேலும் இடிக்கப்பட்ட பகுதி மீண்டும் கட்டித் தரப்பட்டது.

ஞான்வாபி மசூதி இடிப்பை தடுத்து நிறுத்தினாலும், பதற்றம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்கிறார் இந்த மசூதியின் இணை செயலாளர் எஸ்எம். யாஷின்.

அயோத்தியில் கை வைத்தார்கள். இப்போது காசியும், மதுராவும் மட்டுமே பாக்கி உள்ளது என்கிறார் யாஷின்.

வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் சுரேந்திர சிங் கூறும்போது, தடுப்புகள் அமைக்கப்பட்டு மசூதி முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மசூதிக்கு எப்போதும் பாதிப்பு வராது.
இடிக்கப்பட்டது மசூதி அல்ல. சன்னி வக்பு வாரியத்தின் ஒரு பகுதிதான் இடிக்கப்பட்டது என்றார்.

 

 

கார்ட்டூன் கேலரி