ஸ்ரீநகர்,
ம்மு காஷ்மீரில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து 12 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக  அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக நீக்கியது.kasmir
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலையில் பயங்கரவாத இயக்க தளபதி புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. தற்போது வரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரிவினைவாதிகள் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற வன்முறையில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரார்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.  இந்த மோதலில் இதுவரை 90 பேர் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த போராட்டத்தால் காஷ்மீரில் 100 நாட்களுக்கும் மேலாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே,  ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அரசு அதிகாரிகள் 12 பேரை நேற்று மாலை அம்மாநில அரசு நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளரும் அடங்குவார். இவர் மாணவர்களிடையே பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மேலும், கல்வி, வருவாய், பொது சுகாதாரம், பொறியியல் மற்றும் உணவு வழங்கல் துறையின் உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் மீது விசாரணை நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்து உள்ளது.
அரசு அதிகாரிகள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பதவி நீக்கம் செய்யப்படுவது இது கடந்த 26 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும்.
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 1990 ஆம் ஆண்டில் ஐந்து அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.