காஷ்மீர்: ராணுவ தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீர் குல்காம் மாவட்டம் சதர் பன் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.

இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு தீவிரவாதி ராணுவத்திடம் சரணடைந்தார். கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

You may have missed