Random image

காஷ்மீர் : கடத்தப்பட்ட காவலர் பிணமாக கண்டுபிடிப்பு

ச்டூரா

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட காவலர் குல்காம் பகுதியில் பிணமாக கண்டு  பிடிக்கப்பட்டுள்ளார்.

 

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சோபியன் மாவட்டத்தில் உள்ள கிராமம் கச்டூரா ஆகும்.   இங்கு கடந்த ஏப்ரல் மாதம் ஐந்து பயங்கரவாதிகள் காவலர்களை என்கவுண்டர் நடத்திக் கொன்றனர்.  இந்நிலையில்  இங்குள்ள மருந்து ஆய்வகத்துக்கு அந்த்ப் பகுதி காவல் நிலைய காவலரான அகமது தார் என்பவர் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.    ஏற்கனவே என்கவுண்டர் நடந்த பகுதியில் கடத்தல் சம்பவம் நடந்ததால் மாநிலம் அதிர்ச்சி அடைந்தது.    காவல்துறையினர் உடனடியாக ஒரு குழு அமைத்து அவரை தேடி வந்தனர்.   பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று குல்காம் பகுதியில் கடத்தப்பட்ட அகமது தார் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.   அவரது உடலில் துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்தது.   இதனால் அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.    இந்த தகவல்  மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed