டில்லி:

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு வானொலி மூலம்  நாட்டு மக்களுக்கு உரையாற்ற  இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

17வது நாடாளுமன்றத்தை கட்டமைப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. மோடி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து கடந்த 17 ஆவது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 6ந்தேதியுடன்  முடிவடைந்தது.

37 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில், முத்தலாக், என்ஐஏ, தேசிய மருத்துவ ஆணையம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்பட 35 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.

கடைசியில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ரத்து மற்றும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு,  அதற்கான மறுசீர்திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி  உரையாற்ற உள்ளார்.  அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும், அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் மசோதாவும் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேறியதை, தொடர்ந்து கூறிய பிரதமரர் மோடி,  நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும்,  130 கோடி இந்திர்களின் கனவை நிறைவேற்றுவோம்” என்று டிவிட்டர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று ரேடியோவில் உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த மார்ச் 27ம் தேதி  மக்களவை தேர்தல் சமயத்தில் திடீரென உரையாற்றினார். அப்போது,  இந்தியாவின் ஏசாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் உளவு பார்த்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.