காஷ்மீர்: அமர்நாத் யாத்திரை இன்றுடன் முடிந்தது

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் அமர்நாத் குகை கோவில் பனிலிங்கத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

ஜம்முவில் இருந்து பாகல் காம் மற்றும் பகவதி நகர் ஆகிய இரு வழித்தடங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிலையில் 60 நாட்களாக நடந்து வந்த அமர்நாத் யாத்திரை இன்றுடன் முடிந்தது. இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது. இந்தாண்டு யாத்திரையில் 2.84 லட்சம் பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

You may have missed