காஷ்மீர் ஓட்டலில் தகராறு… ராணுவ தளபதி கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதி

ஸ்ரீநகர்:

காஷ்மீர் ராணுவ தளபதி லீதுல் கோகோய் ஓட்டலில் தகராறு செய்த குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்படடுள்ளது.

காஷ்மீர் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞர் ஒருவரை பிடித்து தனது ஜீப்பில் பாதுகாப்பு அரணாக கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது.

கடந்த மே மாதம் ஸ்ரீநகரில் ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் சென்ற லீதுல் கோகோய் தகராறு செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை ராணுவ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில் கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

இதனால் அவருக்கு தண்டனை கிடைக்கவுள்ளது. விசாரணை அறிக்கை ராணுவ தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் தண்டனை விபரம் வெளியாகும் என தெரியவந்துள்ளது.