அடுத்த வருடம் மே மாதம் முன்பு காஷ்மீர் மாநில தேர்தல் : தேர்தல் ஆணையர்

டில்லி

காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் மே மாதத்துக்கு முன்பு தேர்தல் நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையர் ராவத் கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக ஆதரவை நீக்கிக் கொண்டதால் பிடிபி கட்சி ஆட்சியை இழந்தது. அதன் பிறகு  காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்றது.  சமீபத்தில் பிடிபி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் நேஷனல் கான்ஃபரன்ஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன.

ஆயினும் காஷ்மிர் முதல்வர் சத்யபால் சட்டப்பேரவையை கடந்த புதன்கிழமை கலைத்தார்.

நேற்று டில்லியில் தலைமை தேர்தல் அணயர் ராவத் செய்தியாளர்களிடம். “உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்த்ல் நடத்த வேண்டும். தெலுங்கானா சட்டப்பேரவைக்கு அதன்படி தற்போது தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்ப்படுல்ளது.

காஷ்மீர் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டு வரும் மே மாதத்துடன் ஆறு மாதம் முடிவடைவதால் அதற்கு முன்பு தேர்தல் நடைபெற வேண்டும். அதனால் மே மாதத்துக்கு முன்பு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்த என்ணி உள்ளோம்.

அநேகமாக பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல்கல் நடக்க வாய்ப்புள்ளது.    தேர்தல் நடத்த வசதியான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்த பிறகே தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியும்” என தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி