காஷ்மீர் பனிச் சரிவில் சிக்கிய 5 ராணுவத்தினர் பத்திரமாக மீட்பு

ஜம்மு:

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மலை பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிச் சரிவால் அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்டுத்தி வருகிறது. இதில் ராணுவ வீரர்களும் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.


எல்லையில் உள்ள பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் கடந்த 25ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் முகாமுக்கு திரும்பி கொண்டிருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். பனி கட்டிகளுக்குள் சிக்கிய 15 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் மார்ச்சில் செக்டாரில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர். மீட்பு பணி உடனடியாக மேற்கொண்டதை தொடர்ந்து 5 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 140 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி