Random image

கல்லூரி மாணவியுடன் கள்ளத் தொடர்பா? : பாஜக எம் எல் ஏ மீது மனைவி குற்றச்சாட்டு

ம்மு

காஷ்மீர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒரு கல்லூரி மாணவியுடன் கள்ளத் தொடர்பில் உள்ளதாக அவர் மனைவி குற்றம் சாட்டிஉள்ளார்.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர் எஸ் புரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ககன் பகத்.  பாஜகவை சேர்ந்த இவர் மீது ராஜிந்தர் சிங் என்னும் முன்னாள் ராணுவ வீரர் தனது மகளை கடத்தியதாக குற்றம் சாட்டினார்.   அத்துடன் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனது கிராம மக்களுடன் சிங் ஜம்மு பிரஸ் கிளப் எதிரே தர்ணா போராட்டம் நடத்தினார்.

அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி செய்தியளர்களிடம், “என்னை ககன் பகத் கடத்தவில்லை.   அவர் நல்லவர்.  எனது குடும்பத்தினர் எதிர்க்கட்சியான பிடிபி கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது பழி சுமத்துகின்றனர்” என தெரிவித்தார்.   இந்த சர்ச்சை இத்துடன் முடிந்ததாக பலரும் கருதினர்.

ஆனால் தற்போது ககன் பகத்தின் மனைவி மோனிகா சர்மா தனது 12 வயது மகன் மற்றும் நான்கு வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.   மோனிகா பாஜகவின் பெண்கள் பிரிவு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.    செய்தியாளர்களிடம், “எனது கணவர் என்னை விட்டு பிரிந்து அந்த மாணவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.   கடந்த 10 மாதங்களாக அவர் என்னையும் குழந்தைகளையும் பிரிந்து அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இத்தனை நாட்களாக என்னிடம் ஆதாரம் இல்லாததாலும் குடும்ப மானம் கருதியும் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.   தற்போது அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.   இதற்கு  மேல் என்னால் பொறுக்க முடியவில்லை.   எனது மாமியார் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று இந்தப் பெண்ணின் கள்ள தொடர்பு குறித்து ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஒரு முறை நான் அவர்கள் வீட்டுக்கு சென்ற போது என்னைக் கண்டு பயந்து போன அந்தப் பெண் தனது மொபைலை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.  நான் அந்த மொபைலை எடுத்து பார்த்த போது  அதில் இருந்த புகைப்படங்களைக் கொண்டு இருவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை கண்டறிந்தேன்.   அத்துடன் போலியான ஆதார் அட்டையைக் கொண்டு இருவரும் திருமணம் செய்ய முயற்சித்ததற்கான ஆவணங்களும் எனக்கு கிடைத்தன.   அவைகளை நான் கட்சி அலுவலகத்தில் அளித்துள்ளேன்.

அவர்கள் இருவரும் இணைந்து வாழ விரும்பினால் அதை பகிரங்கமாக செய்யட்டும்.   ஆனால் இதுபோன்ற ஒருவரை கட்சி உடனடியாக தண்டிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஆகும்.  இவர்களால் சமுதாயத்தில் நமது கட்சிக்கும் பெயர் கெட்டுப் போகும்.   ஏற்கனவே எனது கணவரிடம் நான் அந்தப் பெண்ணை விட்டு விலகுமாறு கேட்டுக் கொண்டேன்.  அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் இந்த விவகாரத்தை கட்சி ஒழுங்கு ஆணயத்திடம் தெரிவிக்கக் கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.   அது தவிர அடையாளம் தெரியாத சிலர்  என்னிடம் இந்த விவகாரத்தை நான் விடாவிட்டால் எங்களுக்கு ஏதாவது விபத்து நேரிடலாம் என ஜாடையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.