ஒன்பது வயது காஷ்மீர் சிறுவனின் அரிய கண்டுபிடிப்பு : குவியும் பாராட்டு மழை

குவாரெஸ்,  காஷ்மீர்

காஷ்மீரில் உள்ள குவாரெஸ் பகுதியை சேர்ந்த ஒரு 9 வயது சிறுவன் எழுதும் வார்த்தைகளைக் கணக்கிடும் பேனா ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் குவாரெஸ் பகுதியை சேர்ந்த 9 வயது மாணவர் முசாஃபர் அகமது கான்.   இவர் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.    கடந்த தேர்வின் போது இவருக்கு ஒரு பாடத்தில் மதிப்பெண் மிகவும் குறைந்தது.   அதற்கு இவர் குறைவான வார்த்தைகளில் விடை அளித்ததே காரணம் என ஆசிரியர் தெரிவித்துள்ளார்.     எனவே இவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

பிறகு இந்தக் குறையைக் களைய வழி ஒன்றைத் தேடினார்.   தேர்வு எழுதும் போது எத்தனை வார்த்தைகள் எழுதினோம் என்பதை என்ண நேரம் இல்லை என்பதக் இவர் கண்டறிந்தர்.   அதை சரி செய்ய வார்த்தைகளின் எண்ணிக்கையை எழுதும் போதே கணக்கிடும் பேனா ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார்.   பேனாவின் பின்புறம் இணைகப்பட்டுள்ள கேசிங்கில் உள்ள சிறு மானிட்டரில் எத்தனை வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன என்பது இந்த பேனாவில் தெரிய வரும்.

இவரது கண்டுபிடிப்பு ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு விழாவில் காட்டப்பட்டது.   மிகச் சிறிய வயதில் ஒரு அரிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட முசாஃபர் அகமது கானுக்கு பாராட்டு மழை குவிந்தது’

விரைவில் இந்தப் பேனா விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.